Thursday, October 13, 2011

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு






ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
(ஏஞ்சல்..)


உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாக இருந்தேனே 
உன் மேனி அழகை ஆராய விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ஆஹா
இனிமேல் கிஸ் கிஸ் தா வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா


நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை 
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை 
சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்துவிட வா
உந்தன் உயிரில் உறைந்து விட வா உறவே உறவே
(நீருக்குள்..)
(ஏஞ்சல்..)


படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், சித்ரா

ஒரு கடிதம் எழுதினேன்

Play song


ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
(ஒரு கடிதம்..)
(ஒரு கடிதம்..)

கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)

படம்: தேவா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி






சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்


கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......


சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி


படம்: மீண்டும் கோகிலா.
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே



சுடிதார் அணிந்து வந்த சொர்கமே



சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போடா பொல்லாத பயா
நம் மேல் நம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
(சுடிதார்..)

உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம் 
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
(உன் மேல்..)

பல கோடி பெண்களிலே
எதர்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்சம் தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலிது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதலிது
நெஞ்சை விட்டு போகுமா
(உன் மேல்..)
(சுடிதார்..)

படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்:

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

Play song


தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

................தெய்வம் தந்த வீடு.......................

படம் : அவள் ஒரு தொடர்கதை (1978)
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : KJ யேசுதாஸ்
வரிகள் : கண்ணதாசன்

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா



அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா
படம்: எதிர் நீச்சல்
பாடியவர்கள்: பி.சுசீலா + TMS
இசை: வி.குமார்
நடிகர்கள்: சௌகார்ஜானகி+ஸ்ரீகாந்த்

சுசீலா:
ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்

TMS:
ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS :
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி.. பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

சுசீலா:
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?

TMS:
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு

சுசீலா:
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு

TMS:
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?

சுசீலா:
எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு

சுசீலா:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?

TMS :
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

சுசீலா:
என்னத்தை செய்வேள்?

TMS:
சொன்னத்தை செய்வேன்

சுசீலா:
வேறென்ன செய்வேள்?

TMS:
அடக்கி வெப்பேன்

சுசீலா:
அதுக்கும் மேலே?

TMS:
ம்ம்ம் பல்லை உடைப்பேன்

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு


ஒரு நாளுக்குள் எத்தனை கனவு


ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் ஒடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றோ திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனி மலை ஒரு எறிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
(ஒரு நாளுக்குள்..)

நதியாலே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதல் இல்லை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள்
நீ பார்க்காமல் உன்னை மறக்கலாம்
இனி காதல் கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும் 
( ஒரு நாளுக்குள்..)

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்






பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்


நீ வருவாயென நீ வருவாயென


பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென


கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் 
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென 
வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் 
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் 
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் 
என் வாசல் பார்க்கிறேன்


நீ வருவாயென நீ வருவாயென (பார்த்து)




எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் 
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட 
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் 
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து 
இரு விழிகள் தேய்கிறேன்


நீ வருவாயென நீ வருவாயென


(பார்த்து)




பாடலைப்பாடியவர் : எஸ்.பி.பி
இசை : எஸ் . ஏ ராஜ்குமார்
படம் : நீ வருவாயென

துளி துளி துளி மழையாய் வந்தாளே...




"பையா"...துளி துளி துளி மழையாய்



துளி துளி துளி மழையாய் வந்தாளே... 
சுட சுட சுட மறைந்தே போனாளே...

பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும், பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா...சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...அழகாய் மனதை பறித்து விட்டாளே.......
துளி துளி துளி மழையாய் வந்தாளே... 
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ! காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ! நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...அழகாய் மனதை பறித்து விட்டாளே....செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோழ்களில் சாயுவேன்..பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன், நெஞ்சிலே தாங்குவேன், காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள், காயமின்றி வெட்டி போட்டாள்..உயிரை ஏதோ செய்தாள்...மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...கனவில் கூச்சல் போட்டாள்...அழகாய் மனதை பறித்து விட்டாளே...செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது



நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது


நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம் 
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர..)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும் 
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

படம்: சூர்யவம்சம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, சுனந்தா
வரிகள்: மு. மேத்தா

என் காதல் சரியோ தவறோ.. - Feel my love



குட்டி - Feel my love



Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love
என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love
என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரவேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பணிரெண்டு மணி முள்ளை போல சேறும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உந்தன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்...)

படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: கேகே

Thursday, September 29, 2011

புல்வெளி புல்வெளி தன்னில்










புல்வெளி புல்வெளி தன்னில் 
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து 
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா


சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம் 
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்


புல்வெளி புல்வெளி தன்னில் 
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா


துள்துள்துள் துள்துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென ஓடு நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம் 
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்


புல்வெளி புல்வெளி தன்னில் 
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து 
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா


படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்: சித்ரா / உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

Wednesday, September 28, 2011

மின்னலே - வெண்மதி வெண்மதியே நில்லு

படம் :மின்னலே (2001)
இசை :ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :ரூப் குமார் ரத்தோடு, திப்பு

பாடல் வரி: வாலி


 





வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு



வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...






வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ மனமே






வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...


ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

மின்னலே - வேறென்ன வேறென்ன வேண்டும்



படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்

பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : தாமரை





வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே


நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு


நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


இதை யாரிடம் கேட்டு சொல்வேன்


கால்களின் கொலுசே கால்களின் கொலுசே 
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே


ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை


நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா


இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்


நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு... 
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு...    சொல்லி விடு...    சொல்லி விடு...