Friday, August 3, 2018

ஆழியிலே முக்குளிக்கும்


ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா...

(இசை...)

ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மவுனத்தை குடி வைக்கவா

(இசை...)

ஆண்: அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அழகே... அழகே... வியக்கும் அழகே....
அழகே... அழகே... வியக்கும் அழகே....

எம்புட்டு இருக்குது ஆச



எம்புட்டு இருக்குது ஆச உன்மேல     
அதக்காட்டப்போறேன்     
     
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட     
கொடியேத்த வாரேன்     
     
உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது     
உம்முன்னு இருக்குறியே     
     
செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்     
அம்மம்மா அசத்துறியே     
     
கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி      (எம்புட்டு)
     
கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு     
என்ன இருக்குது மேலும் பேச     
     
பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய     
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச     
     
தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா     
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்     
     
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்     
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்     
     
முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட     
வெஷம் போல ஏறுதே      (சந்தோசம்)
     
ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி     
குத்துவெளக்கென மாறிப்போச்சி     
     
கண்ண கதுப்பு எது மீது பறிக்க     
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு     
     
பத்து தல கொண்ட இராவணனா     
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து     
     
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு     
என்ன இருட்டிலும் நீ அறிந்த     
     
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற     
மலை ஏற ஏங்குறேன்      
உன் கூட எம்புட்டு இருக்குது ஆச     
உன் மேல அதக்காட்டுப்போறேன்