Thursday, August 15, 2013

நீயின்றி நானும் இல்லை



நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடு வானம் சிவந்து போகும்
தொலை தூரம் தொலைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ.... ,,,,,,,,,

நீயின்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனை காணும் நேரம் வருமா..வருமா
என் கண்கள் மோட்சம் பெறுமா

விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
தினம் நானும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அலையோடு கரைந்து நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் இமை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனை தேடி
லாயி லாயி லாயி,,, ,,,,,

Friday, August 2, 2013

விழி மூடி யோசித்தால்..

விழி மூடி யோசித்தால்.. 
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் 
தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் 
ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே 
உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே 
நான் என்னை கண்டேனே செந்தேனே
(விழி மூடி..)

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் 
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் 
மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் 
உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.
(விழி மூடி..)

ஆசை என்னும் தூண்டில் 
முள்ளால்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்
விழி மூடி யோசித்தால்..

துளி துளி துளி மழையாய் வந்தாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்

பேரை கேட்க தோன்றும்
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்....

செல் செல் அவளுடன் செல் என்றே
கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

அழகாய் மனதை பறித்து விட்டாளே..
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை
கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ!
நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்,
பார்வை ஆளை தூக்கும்...
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்...
பாதம் ரெண்டும் பார்க்கும்போது
கொலுசாய் மாறதோன்றும்...

அழகாய் மனதை பறித்து விட்டாளே....
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன்..
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,

நெஞ்சிலே தாங்குவேன்,
காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்..
உயிரை ஏதோ செய்தாள்...
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...
கனவில் கூச்சல் போட்டாள்...

அழகாய் மனதை பறித்து விட்டாளே...

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா...
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொள்ளுதடா...

துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே...
துளி துளி துளி மழையாய் வந்தாளே...
சுட சுட சுட மறைந்தே போனாளே....

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே


யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே 
என்னை பார்க்கிறாள் ஏதோ
கேட்கிறாள் எங்கும் இருகிறாலோ 
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால்
நடக்கிறாள் நெஞ்சை கிழிகிறாலோ 
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தால் 
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தால் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே 



என் வீடு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள் 
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன் 
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில் 
அதிகாலை சூரியனை பார்த்தேன் 
கண்ணாடி வளையலை போலே 
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் 
கால்தீண்டும் கொழுசில் என்னோட மனச 
சேர்த்து கொர்கவே தவிப்பேன் 
காதோடு தவழும் கம்மல் போல்கிடப்பேன் 
கன்னத்தை உறசி என் ஜென்மம் முடிப்பேன் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ...


நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள் 
பார்காத நேரம் என்னை பார்ப்பாள் 
என்னை பார்த்து சிரிப்பால்
நான் பார்த்தல் மறைப்பால் 
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பால் 
பெண் நெஞ்சம் புதி அதை எப்போதும் 
யாரும் யாரும் அறிந்ததே இல்லை 
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும் 
பெண்கள் மதிபதே இல்லை 
மனம் நொந்த பிறகே
முதல் வார்த்தை சொல்வாள் 
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள் 
என்னை ஏதோ செய்தால் ...

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலி 
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது


பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும்
 தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
எதைத்த தருவது தானென்று

எதைப் பெறுவது தானென்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
இதயம் குதித்தோட
தலையசைக்குது உன் கண்கள்
தவிதவிக்குது என்நெஞ்சம்
ஒரு தீ போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட
ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாக
பூமுகம் உன் பூமுகம்
அது முடியாத முதல் பாகம்
இவள்தானே உன் இதழால் படிப்பாயோ
கண்ணிமையால் எனை
மூடி காதல் திறப்பாயோ
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும் போது
உலகை மறந்தேனே
உனதருகினில் நானிருக்க
உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய்
இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே
மாலையில் மாலையில்
உன் மடி மீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில்
நான் மருதாணி மழை தானே
வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண்ணிலவோ தொடுந்தூரம்
உன்மழையில் நனைந்தாலே
காய்ச்சல் பறந்தோடும்
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும்
 தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே.....


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில் 

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி 
அசையும் எதுவும் இசையில் எதுவும் இனிமையடி 


வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம் 
இதயபுதரில் சிதறி சிதறி வழிவது ஏன் 
உதிரும் துளியில் உதிரம் முழுதும் உதிர்வது ஏன் 
உருகாதே உயிரே விலகாதே மனதே 


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 

பசை ஊரும் இதழ் , பசி ஏறும் விரலும் 

உயிரின் இடையில் மயிரின் இழையும் தூரமது 

ஒரு வெள்ளை திரையை உன் இதயம் திறந்தாய் 
சிறுக சிறுக இறகை திருடும் தாரிகையே 

விடியும் வரையில் எழுதும் எதுவும் தூரிகையே 
விடியாதே இரவே முடியாதே கனவே 
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ , காதல் காதல் பிறந்ததோ 
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ 
மாலை வானம் வேலை காட்டுதோ 
என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ 


நிலவில் ,என் நிலவில் ஒரு மின்சாரம் தான் தூவுதோ 
கனாவில் , என் கனாவில் உன் பிம்ப துகள் இன்பங்கள் பதிகையில்

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)