ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்
தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேட்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பாக்குதடி உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
Sunday, September 22, 2013
காதல் என்னுள்ளே வந்த நீரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில் நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில் சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவைப் போல் மனதினில் உள்ளே வந்தாடுவதாரோ என் சுவாச அரியாகி எனைத் தாங்கும் உடலாகி உயிர் வாழ கூட்டிச் செல்வது யாரோ
காதல் ...
அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய் அளவில்லா காதலையும் எந்த சூழலிலும் நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடித் பார்ப்பேன் குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா
காதல் ...
வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன் வாழும் நாட்களும் ஆயுள் முழுதிலும் உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும் உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப் போகும் என் குணம் குனவீனம் உன்னோடு சேர்ந்து விட்டால் நலமாய் நலமாய் அது மாறாதா