Monday, July 29, 2013

முழு மதி அவளது முகமாகும்


முழு மதி

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடுயென வரம் கேட்டேன்
அது கொடுத்தால் உடனே எடுத்தே சென்றுவிட்டால்

ஒ ..ஹூ முழுமதி அவளது முக்ஹமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால்தடமே பதிக்காத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மோனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவளிருக்க .. மறுகரையாக நான் இறுக்க
இடையில் தனிமை தளம்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ..

ஹோ ..ஊ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமையிதியுடன் அவள் வந்தால்
விரல்களை நான் பிடுத்து கொண்டேன்
பல வானவில் பார்த்தேன் வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தேன் தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிபிடம்

அருகில் இருந்தாளொரு நிபிடம்
தொலைவில் தெரிந்தால் மறு நிபிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாய்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா?

ஒ ..ஹூ முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் ...

Thursday, July 25, 2013

ரகசியமானது காதல்



ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
ஸ்வரசியமானது காதல்
மிக மிக ஸ்வரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

Wednesday, July 10, 2013

வா வா என் தேவதையே



வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்!