Saturday, August 6, 2011
கீரவானி
ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி
ஆண்: கீரவானி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ
(கீரவானி)
ஆண்: கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி
பெண்: தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
ஒருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
(கீரவானி)
(அடி ஏனடி)
ஆண்: புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்
பெண்: இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
(கீரவானி)
(அடி ஏனடி)
படம்: பாடும் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment