Sunday, September 11, 2011

செந்தமிழ் தேன் மொழியாள்




சில்லென்று பூத்த சிறு நெடுஞ்சி காற்றினிலே..
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள்.நெடுந்தூரம் பறந்தாள்.
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்!
மனம் பெறுமோ வாழ்வே!
 ஆ ஆ.. ஆ ஆ.. ஆ ஆ.. ஆ ஆ..


 செந்தமிழ் தேன் மொழியாள்  
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்'




என்று துவங்கி அழகிய எளிய இனிய சொற்களுடன் கவிஞரின் கற்பனை சிறகடித்து விரியும் அழகைப் பார்க்கலாமே.


காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ (2) அ ஆ....ஆ ..ஆ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ'(2) அவள்

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்' அவள் (செந்தமிழ் தேன்மொழியாள்)



கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ(2) - அவள்

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள் (நிலாவென) (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்' 



என்ற வரிகள்
என்று நம் மனக்கண்ணில் ஒரு காப்பிய நாயகியின் 'சிற்பி செதுக்காத பொற்சிலை' யை வடிவமைத்துக் கொடுக்கிறதன்றோ?


மலரினும் மென்மையான மெல்லியலாரை இதைக் காட்டிலும் பொருத்தமான உவமைகள் கொண்டு நயமாக விளக்க இயலுமா என்று வியக்க வைக்கிறது. கவிஞரின் பாடலுக்குப் பொருததமாக இசையமைத்த விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கும் அதை அனுபவித்து பாடி இசை விருந்தாக்கிய திரு.மஹாலிங்கத்திற்கும் ஒரு " ஓ" போடலாமே.
*****




சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

No comments:

Post a Comment