Wednesday, September 28, 2011

கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்

படம் : என் ஆசை மச்சான்  (1994)
இசை : தேவா
பாடியவர் : K.S.சித்ரா
பாடல் வரி : வாலி








கருப்பு நிலா..... கருப்பு நிலா...

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்(2)

சின்ன மானே மான்குயிலே 
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன் 
இந்த பூமியில் வாழும் வரை
எட்டு திசையாவும் கட்டி அரசாள வந்த ராச நீதானே


கருப்பு நிலா ...


பத்து மாசம் மடி ஏந்தி பெத்தெடுத்த மகராசி
பச்சபுள்ள உன்னை விட்டு போனத எண்ணி அழுதாயா
மாமன் வந்து எனை காக்க நானும் வந்து உனை காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம்
பூவிழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு


கருப்பு நிலா ...

வண்ண வண்ண முகம் காட்டி 
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி 
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே 
சொக்க வல்லி மணி போலே
கன்னம் இரண்டும் மின்ன மின்ன 
கண்மனியே மடி மேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அதை கேட்டு
ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீதானே


கருப்பு நிலா ...(2 times)

என் மானே மான் குயிலே 
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன் 
இந்த பூமியில் வாழும் வரை
எட்டு திசையாவும் கட்டி அரசாள வந்த ராச நீதானே

கருப்பு நிலா ...

No comments:

Post a Comment